முகக்கவசம் அணிவதை கிண்டல் செய்த நபருக்கு கொரோனா உறுதியானது.!

முகக்கவசம் அணிவதை கிண்டல் செய்த நபருக்கு கொரோனா உறுதியானது.!

Update: 2020-04-12 12:58 GMT

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் அதனை கிண்டல் செய்து டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வெளியே செல்லும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் மாவட்டத்தில் 25 வயது நபருக்கு இருமல், சளி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் செய்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லவில்லை. ஆனால் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவருடைய உடல்நிலை சரியாக தான் இருக்கிறது என சாகர் பண்டல்காண்ட் மருத்துவ கல்லூரி டீன் கூறியுள்ளார்.


டிக்டாக்கில் கிண்டல் செய்த நபர்: சமூக வலைத்தளமான டிக் டாக்கில் இவரிடம், மற்றொருவர் முகக்கவசம் அணியுமாறு கூறினார். அதனை மறுக்கும் இந்த இளைஞன் ஒரு துணியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு கடவுளின் மீது நம்பிக்கை இருக்கிறது என கூறிவிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் தற்போது மீண்டும் டிக்டாக்கில் எனக்காக கடவுளிடம் வேண்டுமாறு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். பின்னர் மருத்துவர்கள் அவரிடம் இருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனர்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2519964

Similar News