திருச்சியில் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி, கொலைமுயற்சி பதிவு செய்த போலீசார்

திருச்சியில் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி, கொலைமுயற்சி பதிவு செய்த போலீசார்

Update: 2020-04-12 09:42 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த சில சிறுபான்மையினர் மருத்துவமனைகளில் செய்யும் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இவர்களை காக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை பணிசெய்ய விடாமல் தினமும் பல்வேறு வகையான தொல்லைகள் கொடுத்து வருவது மிகவும் வேதனை அளிக்கும் விதமாக அமைகிறது.

இதுபோன்று அவர்கள் செய்யும் அராஜகத்தை பொறுத்துக்கொண்டு வைத்தியம் செய்யும் மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் ஆவார்கள்.

இதற்கு முன்னர் டெல்லியில் செவிலியர்கள் முன்பாக நிர்வாணமாக சுற்றி திரிந்த தப்ளிக் அமைப்பினர், அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரியாணி கேட்டு மருத்துவமனையை சேதப்படுத்திய நோயாளி என்று குற்றச்சாட்டு அடுக்கி கொண்டே போகலாம்.

இந்நிலையில், திருச்சியில் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதில் ஒரு நோயாளி மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்துள்ளார். மருத்தவர்கள் பொறுமை காத்து அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், இன்று காலை மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்தபோது நோயாளி ஒருவர் எச்சிலை மருத்துவர் முகத்தில் துப்பி உள்ளார்.

அது மட்டுமின்றி தான் அணிந்திருந்த முககவசத்தையும் கழட்டி மருத்துவர் மீது வீசியுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் மீது காவல்துறையினர் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மருத்தவர்களின் கோரிக்கையாகும். 

Similar News