டெல்லி "தனியார்" மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து ஊர் ஊராக சுற்றிய நபர் - கிராமத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெட் அலர்ட்!

டெல்லி "தனியார்" மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து ஊர் ஊராக சுற்றிய நபர் - கிராமத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெட் அலர்ட்!

Update: 2020-04-10 09:48 GMT

ஹரியானாவின் சார்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள ஹிண்டோல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு  கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் இல்ல  என்றாலும், நோயாளியின் சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நியூஸ் 18 அறிக்கையின்படி, மார்ச் 20 அன்று டெல்லியில் நடந்த "தனியார்" மாநாட்டில் கலந்து கொண்டு நோயாளி திரும்பியிருந்தார். இருப்பினும், அவர் தனது பயண வரலாற்றை மறைத்து, மக்களுடன் தீவிரமாக பழகியிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த நபர் தனது பயண வரலாற்றை தான் சந்தித்த மக்களிடம் மறைத்துள்ளார். அந்த நபர் பீடியைப் புகைக்கவில்லை என்றாலும், சமீப நாட்களில் அவர் பலருடன் 'ஹுக்கா' புகைப்பதைக் கண்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அந்த நபர் தனது பல அறிமுகமானவர்களின் வீடுகளுக்கும் சென்று அவர் கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். சமீபத்திய நாட்களில், அந்த நபர் 4 கிராமங்களில் உள்ள பல குடும்பங்களை பார்வையிட்டதாகவும், பலபேருடன்  நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அண்மைய வாரங்களில் டெல்லி சென்று மாவட்டத்திற்குத் திரும்பியவர்களைப்பற்றி மாவட்ட நிர்வாகம் விசாரிக்கத் தொடங்கியபோது, அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அந்த நபருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த 72 க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை நிர்வாகம் தயாரித்துள்ளதாக மாவட்ட சி.எம்.ஓ டாக்டர் பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார்.

நோயாளியின் சமூகமயமாக்கலின் அளவைப் பார்க்கும்போது, ஹிண்டோல் கிராமத்தைச் சுற்றியுள்ள 3 கி.மீ பரப்பளவு சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. ஹரியானாவில் இதுவரை 98 பேருக்கு கொரோனா வைரஸ்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. திங்களன்று 22 புதிய வழக்குகள் சேர்க்கப்பட்டன, அவற்றில் 18 வழக்குகள் டெல்லி தனியார் மாநாட்டுடன் தொடர்புடையவை.

Source: opindia

Similar News