வட கிழக்கு மாநிலங்களையும் பதம் பார்க்கும் கொரோனா, என்ன நடக்கிறது ?

வட கிழக்கு மாநிலங்களையும் பதம் பார்க்கும் கொரோனா, என்ன நடக்கிறது ?

Update: 2020-04-13 10:55 GMT

நாகாலாந்தில் முதல் தடவையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 9152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 308 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மஹாராஷ்டிராவில் தான் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் இடையே நாகாலாந்தில் இதுவரை எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பில்லை. தற்போது முதல் தடவையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநிலம் திமாபூரை சேர்ந்த ஒரு நபர் கொல்கத்தா சென்று திரும்பினார். அவருக்கு கொரோனாவின் அறிகுறி இருந்ததால் அவரை நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பரிசோதனையின் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பிறகு அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக அசாம் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாகலாந்தில் அந்த நபர் இருந்த குடியிருப்புப் பகுதி மற்றும் அவரை அழைத்து சென்ற மருத்துவமனை ஆகியவற்றை சில் வைத்தனர். 

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2520512

Similar News