மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'கிரையோஜெனிக்' என்ஜின் சோதனை: வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தகவல்
மனிதனை விண்ணுக்கனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்திரயான்- 3 வெற்றியைத் தொடர்ந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரோ. முதற்கட்டமாக ஆளில்லா இரண்டு ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனுடைய வெற்றியை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக பல்வேறு சோதனைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான சி ஏ 20 'கிரையோஜெனிக் ' என்ஜின் சோதனை நெல்லை மாவட்டம் காவல்கிணறிலுள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
SOURCE :DAILY THANTHI