தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி 11 இடத்தை கைப்பற்றும் : சி.வோட்டர் கருத்து கணிப்பு

தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி 11 இடத்தை கைப்பற்றும் : சி.வோட்டர் கருத்து கணிப்பு

Update: 2019-05-19 15:07 GMT

2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்று மாலை முதல் வெளியாக துவங்கியுள்ளன. அதில், டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா முழுவதும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 132 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


சி. வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 287 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி 11 இடத்தை கைப்பற்றும் என்றும், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களை கைப்பற்றும் என்றும் சி. வோட்டர் கணித்துள்ளது.




https://twitter.com/ians_india/status/1130116770713559042?s=19


தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று கண்டிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


Similar News