பெருகி வரும் சைபர் குற்றங்கள் - முகத்தை மார்பிங் செய்து பெண்களை குறிவைக்கும் கும்பல்
முகத்தை மார்பிங் செய்து கல்லூரி மாணவிகள்,வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பும் மோசடி நபர்களின் தொந்தரவுகள் பெருகி வருகின்றன.
முகத்தை மார்பிங் செய்து கல்லூரி மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பும் மோசடி நபர்களின் தொந்தரவுகள் பெருகி வருகின்றன. இதனால் பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நமது நாட்டின் மொத்த மக்கள் தொகை 138 கோடி இதில் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார்கள். பெருகிவரும் இணையதள பயன்பாட்டுக்கு ஏற்ப ஆன்லைன் மோசடிக்காரர்களும் புது புது அவதாரம் எடுத்து தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தான். தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 748 .
இது 2021 ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 777 ஆக உள்ளது. 10 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்ற புகார்களின் எண்ணிக்கை 1,648 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கல்லூரி மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்களை குறி வைத்து சென்னையில் சமீப காலங்களில் மோசடி பேர்வழிகள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .செல்போன் எண்களை திருட்டுத்தனமாக பெற்று 'மார்பிங்' செய்யப்பட்ட அவர்களுடைய ஆபாச புகைப்படங்களை அனுப்பி வேறு யாருக்கும் அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் கணிசமான அளவுக்கு தொகை தர வேண்டும் என்று மிரட்டுவது உட்பட பல்வேறு குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு கொடூரம்தான் சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் நேர்ந்தது .எம் .எஸ் .சி உளவியல் படித்துவிட்டு அந்தப் பெண் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பெண்ணின் செல்போன் எனக்கு புதிய செல்போன் எண்ணில் இருந்து' வாட்ஸ் அப்பில்' ஒரு ஒரு படம் வந்தது. அதனை பதிவிறக்கம் செய்தபோது பெண்ணுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய முகம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச படம் உடன் இணைக்கப்பட்டிருந்தது.உடனே இந்த செல்போன் என்னை பிளாக் செய்துவிட்டார் . சுதாரித்துக் கொண்ட மோசடி நம்பர் உடனே அந்த படத்தை வாட்ஸ் அப்பில் இருந்து அழித்து விட்டார்.