தமிழ் புத்தாண்டு தினத்தில் சன் டிவியில் 'தர்பார்'..

தமிழ் புத்தாண்டு தினத்தில் சன் டிவியில் 'தர்பார்'..

Update: 2020-04-07 06:03 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த வித படப்பிடிப்பும் நடைபெறாத நிலையில் மெகா தொடர்களை நம்பியிருக்கும் தனியார் தொலைகாட்சிகள் தங்கள் பார்வையாளர்களை தக்க வைத்து கொள்ள பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. சில தொலைகாட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

சில தொலைகாட்சிகள் காலை முதலே படங்களை ஒளிபரப்புகின்றன. அந்த வரிசையில் சன் தொலைகாட்சி காலை முதலே படங்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்நிலையில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான 'தர்பார்' படத்தினை ஒளிபரப்பவிருப்பதாக அறிவித்துள்ளது.

Similar News