நாடு முழுவதும் நாச வேலைக்கு இளைஞர்களை தேர்வு செய்த ஐந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை - டெல்லி கோர்ட் அதிரடி!

நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்த ஐந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டது

Update: 2022-11-29 09:30 GMT

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சஜத் அகமது கான், பிலால் அகமது மிர்,முசாபர் அகமத் பட், இஷ்பக் அகமது பட், மெராஜ் உத் தின் சோபன்,தன்வீர் அகமது கானி. இவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் என். ஐ. ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்ட அவர்கள் இந்தியாவிற்கு வந்து நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள வழக்குகளுக்கான தனி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி சைலேந்தர் மாலிக் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-


குற்றவாளிகள் அனைவரும் ஜெய்ஷ் இ முகமது இயக்க உறுப்பினர்கள் மட்டுமின்றி அந்த இயக்க பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளித்துள்ளனர். ஆயுத உதவிகளும் வெடிகுண்டு மற்றும் தளவாட உதவிகளும் அளித்துள்ளனர் அவர்கள் காஷ்மீர் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து காஷ்மீரிலும் நாட்டின் இதரப் பகுதிகளிலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தேர்வு செய்துள்ளனர். தாக்குதலுக்கு குறிவைக்கப்படும் இடங்களை உளவு பார்த்தல் மறைவிடங்களை அடையாளம் காணுதல், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தல், நாசவேலையில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் கூட்டுசதி செய்ததுடன் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துள்ளனர். இவ்வாறு  நீதிபதி கூறியுள்ளார்.





 


Similar News