இந்திய மசாலா பொருள்களில் பசுவின் சாணமும் சிறுநீரும் கலந்திருப்பதாக அவதூறு வீடியோ - பறந்த ஹைகோர்ட் உத்தரவு!
இந்திய மசாலா பொருள்களில் சாணம் கலந்திருப்பதாக அவதூறு வீடியோ வெளியிட்டு யூடியூப் சேனல்களுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி ஹைகோர்ட் இந்த வீடியோவை நீக்க உத்தரவிட்டது.
தரம்பால் சத்யபால் சன்ஸ் என்ற நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்நிறுவனம் 'கேட்ச்' என்ற பெயரில் மசாலா பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. இரண்டு யூடியூப் சேனல்களில் தங்கள் பிராண்டு உட்பட முக்கிய நிறுவனங்களின் மசாலா பொருட்களில் பசுவின் சிறுநீரும் சாணமும் கலந்திருப்பதாக அவதூறு வீடியோ வெளியா இருப்பதாகவும் அதனால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளது.
இந்த மனு நீதிபதி சஞ்சீவ் நடுலாம் முன்பு விசாரணைக்கு வந்தது. திட்டமிட்டு களங்கப்படுத்தும் நோக்கத்தில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். எனவே அந்த வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.