ஏரிக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோவில் இடிப்பு - மக்கள் திரண்டனர்!

ஒரத்தநாடு அருகே கட்டப்பட்டிருந்த கோவிலை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் பொக்லின் எந்திரங்கள் மூலம் எடுத்து அப்புறப்படுத்தினார்.

Update: 2022-10-29 13:30 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சில்லத்தூர் கிராமத்தில் பொதுப்பணி துறையின் கல்லணை கால்வாய் வெட்டிக்காடு கிளையின் பராமரிப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த கோர்ட் சில்லத்தூர் பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.


தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக சில்லத்தூர் பெரிய ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்த சுமார் 56 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் ஏரிக்கரையில் இருந்த நான்கு வீடுகள் போன்றவற்றை அகற்றினர். மேலும் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த இடும்பன் கோவிலை இடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று வருவாய் துறை அதிகாரிகளின் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சில்லத்தூர் பெரிய ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இடும்பன் கோவிலை பொக்லின் எந்திரம் மூலம் எடுத்து தரைமட்டம் ஆக்கினார்.





 


Similar News