திருமலையில் பவித்ரோற்சவ கோலாகலம் - மலையப்பசாமியை காண குவிந்த பக்தர்கள்

திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தற்பொழுது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-09 12:42 GMT

திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தற்பொழுது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடைபெறும், அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருவார்கள்.


இந்த நிலையில் பூஜை முறைகளில் அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆண்டுதோறும் திருமலையில் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.



இந்த ஆண்டுக்கான மூன்று நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று பவித்ரப் பிரதேசம் நடந்தது முன்னதாக உற்சவங்களான ஸ்ரீதேவி, பூதேவி மலையப்பசாமி கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டார்கள். அங்கு ஹோமம் காரியாக்கிரமங்கள் நடந்தது. சம்பங்கி பிரகாரத்தில் இருந்து காலை 9 மணியளவில் இருந்து 11 மணி வரை உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தன, மஞ்சள் மற்றும் சுகந்த வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து மாலை 4 மணியளவில் உற்சவர்களுக்கு சிறப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணியிலிருந்து இரவு 7 மணி வரை உற்சவங்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்து கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரத்யோக ஆபரணங்களால் உற்சவங்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணியிலிருந்து இரவு 11:00 மணி வரை யாகசாலையில் காரியாக்கிரமங்கள் நடந்தது. இதனை திருமலையில் உள்ள பக்தர்கள் கண்டுகளித்தனர். 

Similar News