தேரில் ஏறி ஆகம விதிகளை மீறினாரா முதல்வர் மனைவி துர்க்கா ஸ்டாலின்? - இந்து முன்னணி கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் திருக்கோஷ்டியூர் தேரில் ஏறி தரிசனம் செய்ததற்கு இந்து முன்னணி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-16 13:51 GMT

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் திருக்கோஷ்டியூர் தேரில் ஏறி தரிசனம் செய்ததற்கு இந்து முன்னணி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.


திருக்கோஷ்டியூர் பெருமாள் தேர்த்திருவிழா சமீபத்தில் நடைபெற்றது அந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்ட முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் தேரில் ஏறி சாமி தரிசனம் செய்தார் பின்னர் கடும் மழை காரணமாக தேர் பாதியில் நிறுத்தப்பட்டு இரவு முழுவதும் தேர் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த ஊர் பொதுமக்கள் தேர் நிலைக்கு வராமல் இருப்பது சகுனம் சரி இல்லை என்ற ரீதியில் பேசி வந்தனர்.





இந்நிலையில் முதல்வர் துர்கா ஸ்டாலின் ஆகம விதிகளை மீறிவிட்டதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, 'அதிகார துஷ்பிரயோகம் முதல்வரின் மனைவி திருக்கோஷ்டியூர் தேரில் ஏறி தரிசனம் பின்னர் முதல் முறையாக கடும் மழையால் தேர் பாதியில் நிறுத்தப்பட்ட உற்சவராகவும் அதன் இரவு முழுவதும் மழையில் இருந்துள்ளார். முதல்வர் ஆதீனங்களை அவமதிக்கிறார், அவர் மனைவி ஆகம விதிகளை ஆணவத்தை மீறி ஆணவத்தை வெளிப்படுத்துகிறார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


முதல்வர் மனைவி தேரில் எரிய சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


தரவு - இந்து முன்னணி பதிவு




Similar News