தூத்துக்குடியில் இருந்து உருக்கமான விடைபெற்ற தமிழிசை - ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்து விட்டதா தமிழகம்?

தூத்துக்குடியில் இருந்து உருக்கமான விடைபெற்ற தமிழிசை - ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்து விட்டதா தமிழகம்?

Update: 2019-05-25 03:23 GMT

தமிழிசை செளந்தரராஜன் - இன்று, தமிழகத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும் பெயர். பா.ஜ.க எனும் கட்சி தமிழகத்தில் பிரபலமில்லாத காலத்தில் தமிழக தலைவராக பொறுப்பேற்ற தமிழிசை இன்று தமிழக இல்லங்களில் பிரபல பெயராகி இருப்பதே பெரிய சாதனைதான்.


தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்து, படித்த தமிழிசை நாடாளமன்ற தேர்தலில் கனிமொழி மிகக் கடுமையான, சவாலான வேட்பாளர் என தெரிந்தும் இன்முகத்துடன் களம் கண்டார்.


தோல்வி அடைந்தாலும், துவண்டு விடாமல் தான் தூத்துக்குடியை மறக்க மாட்டேன், தூத்துக்குடியை சுற்றியே எனது நினைவுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றால் கூட தன் தொகுதி மக்களை அடுத்த தேர்தல் வரை சந்திக்காத தமிழகத்தில் இப்படியும் ஒரு அரசியல்வாதியா என வியக்க வைக்கிறார் தமிழிசை.


தூத்துக்குடி தொகுதி முழுக்க வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார் தமிழிசை.




https://twitter.com/DrTamilisaiBJP/status/1131824557088681984


தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடியில் தமிழிசை ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த இரண்டு மாதமாக தங்கி இருந்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அந்த வீட்டை காலி செய்து சென்னைக்கு செல்ல விமான நிலையம் செல்லும் கணங்கள் தமிழிசைக்கு மிகவும் நெகிழ்ச்சியான நிமிடங்களாக இருந்துள்ளது என்பதை அவரது ட்விட்டர் பதிவுகள் தெரியப்படுத்துகின்றன.


கிளம்புவதற்கு முன்பு முதலில் தூத்துக்குடி பா.ஜ.க-வினரை சந்தித்து நன்றி தெரிவித்தார் தமிழிசை.




https://twitter.com/DrTamilisaiBJP/status/1131907748281454592


அதன் பிறகு அவர்கள் தங்கியிருந்த காவலாளியின் குழந்தைகளுக்கு மிதிவண்டியை பரிசாக வழங்கி அவர்களை அசத்தியுள்ளார்.




https://twitter.com/DrTamilisaiBJP/status/1131936396833218560




https://twitter.com/vijayapalani517/status/1131962225298513921


அதன் பிறகு விமான நிலையம் வந்த பா.ஜ.க-வினரை சந்தித்து நன்றி தெரிவித்து தூத்துக்குடியை விட்டு விடைபெற்றார் தமிழிசை.




https://twitter.com/DrTamilisaiBJP/status/1132120145269219329


ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியை இழந்து விட்டதா தமிழகம்?


Similar News