இந்திய நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடி - மத்திய அரசின் தெளிவான திட்டமிடலால் குவியும் வரி வசூல்

இந்திய நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ10.54 லட்சம் கோடி என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

Update: 2022-11-12 06:15 GMT

நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளி விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வரையிலான நேரடி வரி வசூல் 10.54 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 30.69 சதவீதம் அதிகமாகும். மொத்த வருவாய் வசூல் அடிப்படையில் கார்ப்பரேட் வருமான வரி, மற்றும் தனி நபர் வருமானவரி ஆகியவையும் வளர்ச்சி அடைந்துள்ளன. கார்ப்பரேட் வருமான வரியின் வளர்ச்சி விகிதம் 22.03 சதவீதமாகவும் ,தனிநபர் வருமான வரியின் வளர்ச்சி விகிதம் 40.64 சதவீதமாகவும் உள்ளன.


கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் பத்தாம் தேதி வரை 1.83 லட்சம் கோடிக்கு வரிப்பிடித்தம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்டதை விட 61.07 சதவீதம் அதிகம் ஆகும்.





 


Similar News