காவல்துறையின் செயல்பாடுகளை கேலி செய்கிறதா தி.மு.க? #DMK #Chennaipolice

காவல்துறையின் செயல்பாடுகளை கேலி செய்கிறதா தி.மு.க? #DMK #Chennaipolice

Update: 2020-07-30 13:26 GMT

காவல்துறையின் செயல்பாடுகள் மீது சமீபகாலமாக தி.மு.க அதிக விமர்சனங்களையும், கேலிகளையும் வைத்து வருகின்றது. காவல் துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம், ஒழுங்கை கடைபிடிக்க, மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் ஒரு துறையாகும்.

அரசியலில் மூழ்கி திளைத்த தலைவர்கள் கூட காவல் துறைகளை விமர்சிக்க அதிகம் விரும்ப மாட்டார்கள். ஆனால் தி.மு.க'வின் அரசியலோ வேறு ரகம்! ஆளும்கட்சியை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் மக்களின் அமைதி காக்க உழைக்கின்ற காவல் துறையை அதிக விமர்சனம் செய்வதும், தி.மு.க'வின் ஆதரவு ட்விட்டர் ஐடிக்கள் காவல்துறையை ஏளனம் மற்றும் விமர்சனம் என்கிற பெயரில் கிண்டல் செய்வதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

அதிலும் கொரோனோ ஊரடங்கில் அனைத்து துறைகளையும் விட காவல் மற்றும் மருத்துவ துறை அலுவலர்களே அதிக இன்னலுக்கு உள்ளானார்கள். கடினமான வேலைப்பளு, ஓய்வு கிடையாது, தூக்கமின்மை, குடும்பத்துடன் சிறிது கூட நேரம் செலவழிக்க இயலாமை. கொரோனோ தொற்றின் பயத்தால் தங்களின் கை குழந்தைகளை கூட எடுத்து கொஞ்ச முடியாத காவலர்கள் ஏராளம். அதிலும் பெண் காவலர்கள் என்றால் இன்னும் அதிகம். பணிக்கு சென்று விட்டு வந்து கொரோனோ தொற்றின் காரணமாக வீட்டின் வெளியில் படுத்து உறங்கி தங்கள் துணிகளை தனியே துவைத்து உலர்த்தி விட்டு அடுத்தநாள் பணிக்கு செல்லும் காவலர்கள் இன்றைய தேதியில் ஏராளம்.

ஆனால் தி.மு.க'வோ தான் அரசியல் களத்தில் பேர் எடுக்கவும், இமேஜை உயர்த்தி கொள்ளவும், தங்களை எதிர்க்கின்ற ஆட்களை இந்த காவல் துறை கைது செய்யவில்லையே என்ற பெருமூச்சுடனும் சகட்டு மேனிக்கு காவல்துறையை வசைபாடி வருகின்றனர்.

உதாரணமாக நேற்று ட்விட்டர் கணக்கில் கிஷோர் கே சுவாமி என்கிற நபர் தி.மு.க'வை விமர்சித்து பதிவிட்டதாக காவல்துறை புகாரின் பெயரில் கைது செய்தது, ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் தி.மு.க'வின் இணைய கூலி ஐடிக்களோ கைது செய்த உடன் "ஆகா என்ன ஒரு செயல் வாழ்க காவல்துறை" என்று போற்றி புகழ்ந்தார்கள் ஆனால் ஒரு மணிநேரம் கழித்து கிஷோர் விடுவிக்க பட்ட பிறகு "ச்சே என்ன இது போலீஸ் நடவடிக்கை?" என வசைபாட ஆரமித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு இன்று ட்விட்டரில் #ShameOnChennaiPolice என்கிற ஹேஷ் டேக் பதினைந்தாயிரம் ட்விட்டகளை கடந்து செல்லும் அளவிற்க்கு தி.மு.க ஆதரவு ஐடிக்கள் ட்ரெண்ட் செய்ய ஆரமித்துவிட்டார்கள். இவ்வளவுதான் தி.மு.க, இதுதான் தி.மு.க'வின் கீழ்த்தர எண்ணம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தான் அரசியல் லாபத்திற்காக காவல்துறையை கேலி செய்யும் அளவிற்க்கு சென்றதை காவல்துறையும் கவனித்துகொண்டுதான் இருக்கிறது.

Similar News