"பொத்திக்கிட்டு இரு" "அறிவு இருக்கா?" தி.மு.க - காங்கிரஸ் நிர்வாகிகள் ட்விட்டரில் தரம்கெட்ட வாக்குவாதம் - சந்தி சிரிக்கும் கூட்டணி லட்சணம்!

"பொத்திக்கிட்டு இரு" "அறிவு இருக்கா?" தி.மு.க - காங்கிரஸ் நிர்வாகிகள் ட்விட்டரில் தரம்கெட்ட வாக்குவாதம் - சந்தி சிரிக்கும் கூட்டணி லட்சணம்!

Update: 2019-02-21 07:22 GMT

திருநெல்வேலி தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் ஜோக்கின் ஜெயபால். தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட பிரிவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சஞ்சய் காந்தி. இவர்களின் இருவரின் ட்விட்டர் வார்த்தை போர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது.


காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது என தகவல் வெளியாகியது. அதன்படி நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக முறையான அறிவிப்பை வெளியிட்டார். 2019 மக்களவை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பிற்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகி சஞ்சய் காந்தி "2014ல் செய்தது போல் மோசமான வேட்பாளர் தேர்வை ஸ்டாலின் இந்த முறை செய்யக் கூடாது. காங்கிரசுடன் கலந்தாலோசித்தே திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்." என்ற கருத்தை தனது ட்விட்டர் வலைதள கணக்கில் பதிவிட்டார்.




https://twitter.com/SanjaiGandhi/status/1097865126613372928


இதற்கு பதிலளித்த தி.மு.க நிர்வாகி ஜோக்கின் ஜெயபால் "Stay in ur limits . 41 தொதியில் நீங்கள் நல்ல வேட்பாளர் தேர்வு செய்திருந்தால் இன்று தமிழகத்தில் திமுக ஆட்சி. அடுத்தவர்களுக்கு அறிவுறை சொல்வதற்கு பதில் கட்சியின் உள்கட்டமைப்பை சரிசெய்யுங்கள். பொது வெளியில் குறை சொல்வதை நிறுத்துங்கள்" என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார்.




https://twitter.com/jokinjey/status/1098169826013458437


இந்த ட்வீட்டுக்கு மீண்டும் பதிலளித்த சஞ்சய் காந்தி "பொதுவெளியில் உபிஸ் பொத்திக்கிட்டு இருந்தால் நாங்க ஏன் இப்படிப் பேசப் போறோம். அறிவுரையை இணைய உபிஸ்க்கு சொல்லிட்டு இந்தப் பக்கம் வாங்க." என்று வார்த்தை போரை தொடர்ந்தார்.




https://twitter.com/SanjaiGandhi/status/1098171302450348034


இந்த பதிவிற்கு மீண்டும் பதிலளித்த ஜோக்கின் ஜெயபால் "If you have common sense, 1st read ur Bio n react. Know the difference between office bearers n caders. முதலில் நாகரீகமாக பதில் சொல்லி பழகவும். (பொத்திக்கிட்டு // உபிஸ // இதே மாதிரி பதில் எல்லோருக்கும் பேசமுடியும். நாவடக்கம் தேவை" என்று பொங்கினார்.




https://twitter.com/jokinjey/status/1098173121612279809


தி.மு.க-வினரும், காங்கிரஸும் நேற்று மாறி மாறி திட்டித் தீர்த்துக் கொண்டது நேற்று தமிழ் சந்தின் சிறப்பான சம்பவம். இவர்களே இவ்வாறு இருந்தால், களத்தில் கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று வாயடைத்து போயுள்ளனர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்.


Similar News