"நமக்கு நாமே" திட்டத்திற்கு உதவிய தி.மு.க நிர்வாகி'க்கே விபூதி அடித்த உடன்பிறப்புகள் - தொழிலை இழந்து நிற்கதியாக நிற்கும் அவலம் #DMK #KarurDMK

"நமக்கு நாமே" திட்டத்திற்கு உதவிய தி.மு.க நிர்வாகி'க்கே விபூதி அடித்த உடன்பிறப்புகள் - தொழிலை இழந்து நிற்கதியாக நிற்கும் அவலம் #DMK #KarurDMK

Update: 2020-07-28 08:50 GMT

தி.மு.க என்றாலே அராஜகம் என்று அகராதியில் பதிந்து வைக்கும் அளவிற்க்கு போய்விட்டது. செய்திகளில் இது வருவது குறைவென்றாலும் சமீக வலைதளங்களில் பாதிக்கப்பட்டோர் இது போன்ற சம்பவங்களை உடனுக்குடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் "தண்டபாணி சங்கர்"எனபவர் தனது முகநூல் பதிவில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூரை சேர்ந்த தங்கவேல் என்பருக்கு தி.மு.க இழைத்த துரோகத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த விவரம் பின்வருமாறு, "கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூர் சேர்ந்தவர் தங்கவேல், இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி.

தமிழக அரசின் குளம், குட்டை , ஏரிகள் மற்றும் கால்வாய்களை தூர் வாரி விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடிமராமத்து திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடங்கிய போது திமுகவின் ஸ்டாலின் "நமக்கு நாமே" என்ற பெயரில் திமுகவினர் ஏரி குளங்களை தூர் வாருவார்கள் என்று அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்

நிற்க..

அடிபட்டு தற்போது மருத்துவமனையில் உள்ள தங்கவேலு அப்போது JCB சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார்.. அப்போது அவர் திமுகவில் நிர்வாகியாக இருந்தார். அவரை அனுகிய திமுக நிர்வாகிகள் கொசூர் அருகில் உள்ள நாதிப்பட்டி குளத்தை தூர் வார வேண்டும். ஸ்டாலின் வருவதாகவும் இரண்டே நாட்களில் தூர் வார வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அதற்கு ஒப்புக்கொண்ட தங்கவேல் தனது வண்டியுடன் மேலும் இரண்டு ஜேசிபி மற்றும் டிராக்டர் டிப்பர் லாரிகளை நண்பர்களிடமிருந்து வாடகைக்கு பெற்று இரண்டே நாட்களில் அந்த குளத்தை தூர்வாரி கொடுத்தார்

17/05/2017 அன்று திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு அந்தக் குளத்தை தூர்வாரியதாக சீன் போட்டு பத்திரிகையாளர்களை அழைத்து அரசியல் செய்துவிட்டு சென்றுவிட்டார் அதன் பிறகு குளத்தை தூர்வாரியதற்கான பில்

தொகையான ரூபாய் 150000 கேட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகியான கொசூர் திமுக ஆட்சி செயலாளரரும், கரூர் மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மகாலிங்கம் அவர்களை கேட்டுள்ளார் தங்கவேல் கரூர் மாவட்ட தற்போதைய திமுக அமைப்பாளர் திரு செந்தில் பாலாஜியிடம் வாங்கி தருவதாக கூறிய மகாலிங்கம் சுமார் ஒரு வருட காலம் இவ்வாறு இழுத்த மகாலிங்கம் அதன்பிறகு வருங்கால முதல்வரே உன் வண்டியில் ஏறி உள்ளார் பணம் ஆட்சிக்கு வந்து தருகிறோம்' என கூறி உள்ளார்

இதனால் வெறுப்படைந்த தங்கவேல் திமுகவில் இருந்து விலகி 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.. உள்ளாட்சி தேர்தலில் மகாலிங்கத்தை எதிர்த்த வேட்பாளருக்கு உறுதுணையாக இருந்து மகாலிங்கத்தை தோற்கடித்தார்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி தங்கவேல் மகாலிங்கத்திடம் மீண்டும் பணம் கேட்டு வற்புறுத்தினார். மனைவி பிரசவ செலவுக்கு பணம் இல்லை எனவே உதவுமாறு கூறியுள்ளார். அப்போது மகாலிங்கம் திமுகவில் இருந்தாலே வேலை செஞ்சா பணம் வாங்க முடியாது நீ இப்ப அதிமுகவுக்கு போயிட்ட முடிந்தால் வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார்

கோபத்தில் இருந்த தங்கவேல் தன்னுடைய முகநூல் பக்கத்தில் 'ஒரு தரித்திரம் பிடித்த நாய் என் வண்டியில் கால் வைத்தான் ஆறே மாதத்தில் டியூ கட்டமுடியாமல் வண்டியையே இழந்துவிட்டேன்" என்று ஸ்டாலின் படத்துடன் பதிலிட்டு இருந்தார் இதைக் கண்டு கோபமடைந்த மகாலிங்கம் மற்றும் திமுகவினர் ஐந்து பேர் சேர்ந்து நேற்று காலை கொசூர் கடை வீதியில் நின்று கொண்டிருந்த தங்கவேலு அவர்களை அரிவாளால் வெட்டியும்

கட்டைகளாலும் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்சித்தலைவர் வந்தாரு ஏற்பாடு பண்ண சொன்ன மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் பணம் கொடுக்கல, அதுக்கப்புறம் மாவட்ட பொறுப்பாளரான

செந்தில் பாலாஜியின் பணம் குடுக்கல, ஆட்சியில் இருந்தாலும் இல்லாட்டாலும் திமுகவினர் செய்துவரும் அராஜகங்கள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது" என அந்த முகநூல் பதிவு உள்ளது.

காலங்கள் மாறினாலும் தி.மு.க'வின் கோலங்கள் மாறவில்லை!

Similar News