வாரிசுகளுக்கு கட்சி, தொண்டனுக்கு இடுப்பில் கரைவேட்டியும், தலையில் மொட்டையும் - தி.மு.கவின் பலே கொள்கை.! #DMK #MKStalin #Udhayanithi

வாரிசுகளுக்கு கட்சி, தொண்டனுக்கு இடுப்பில் கரைவேட்டியும், தலையில் மொட்டையும் - தி.மு.கவின் பலே கொள்கை.! #DMK #MKStalin #Udhayanithi

Update: 2020-08-05 09:14 GMT

கட்சி எனும் அரசியல் அமைப்புக்கு வாரிசுகளின் பங்கு முக்கியமே கட்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும், விழாமல் தாங்கி பிடிக்கவும் ஆனால் அதுவே கட்சியின் அழிவுக்கு வாரிசு அரசியலே காரணமாக இருந்தால்?

ஆம், இதுதான் இன்றைய தி.மு.க நிலை. உடன்பிறப்புகள் தலைவரின் வாரிசுகளுக்கு தரும் மரியாதையை என்றுமே குறைக்க விரும்பாதவர்கள் ஆனால் அதே வாரிசு கட்சியின் தலைமையையும், கட்சி விஷயத்தில் தனிப்பட்ட முடிவுகளை மூத்தார்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுப்பதை கட்சிக்கு உண்மையான எந்த தொண்டனும் விரும்பமாட்டான், சிலர் வாரிசால் என்ன தவறு என்று கேட்கலாம் ஆனால் அவர்களின் உள்ளூர நினைப்பு வேண்டுமென்றால் 'கட்சில் இருப்பது நாலு காசு பார்ப்பதற்க்கே' என்று அரசியலை தொழிலாக செய்பவர்களுக்கு 'வாரிசுகள் இருந்தால் என்ன வேறு யார் இருந்நால் என்ன நமக்கு காசுதான் முக்கியம்' என சகித்துகொண்டு காலத்தை ஓட்டலாம். ஆனால் கட்சியை தனது ரத்த ஓட்டமாக நினைக்கும் தொண்டர்களின் நிலை?

கருணாநிதியால் வார்த்தைக்கு வார்தைக்கு வார்த்தை "என அன்பு உடன்பிறப்பே" என அழைக்கப்பெற்று நாள் முழுவதும் உணவு, நேரம், குடும்பம் பார்க்காமல் கட்சியின் கொடியை தூக்கி சுமந்த அந்த 'உடன்பிறப்புகள்' இந்தக்கால வாரிசுகளின் அரசியலால், வாரிசுகளின் பதவி ஆக்கிரமிப்பால் மனதிற்க்குள் உள்ள புகைச்சலை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்கின்றனர்.

கலைஞரின் வாரிசு ஸ்டாலின், ஸ்டாலினின் வாரிசு உதயநிதி இருவரும் தலைமை பொருப்பை விட்டுவிட்டு வாழ துளியும் விரும்பாதவர்கள்,

மற்றொரு வாரிசான கனிமொழி மகளிர் அணி, டெல்லி லாபியிசத்தை கனவிலும் கூட விட நினைக்க மாட்டார். இதுமட்டுமன்றி கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகள் தான் மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இது உடன்பிறப்புகளுக்கு தெரிந்துமே "கட்சில பெரிய இடத்து பையன், அதான் பதவிக்கு ஆசை படுறாப்ல, நாம எங்க?" என்று உடன்பிறபுகளை தெரிந்தே பதவிக்கு ஆசைப்படவைக்க மனது வராத சூழ்நிலையை தி.மு.க உருவாக்கி வைத்திருக்கிறது.

இது மட்டுமன்றி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர் விருப்ப மனுக்கள் நிறைய குவிந்தாலும் அதில் தேர்வுக்குழுவின் மேசைக்கு கட்சியில் பதவியில் இருப்பவர்களின் வாரிசு விண்ணப்பங்கள் மட்டுமே செல்கின்றன. இதற்கு ஆகச்சிறந்த முன்உதாரணம் நாடாளுமன்ற தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், சட்டமன்ற தேர்தலில் டி.ஆர் பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இந்த இருவருமே வாரிசு என்பதை தவிர கட்சியில் பெயர் சொல்லும் அளவிற்கு ஏதுமே செய்யாதவர்கள். ஏன் இவர்கள் தலைமையில் ஒரு கூட்டமாவது கூட்டிய அனுபவம் கூட இல்லாதவர்கள் ஆனால் இன்று கதிர் ஆனந்ந் எம்.பி, டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ ஆனால் இந்த இரு ஏரியாவிலும் அதாவது வேலூர் மற்றும் மன்னார்குடியில் இவர்களை தாண்டி கட்சியை மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் உடன்பிறப்புகள் ஏராளம்.

இது போக வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வாரிசுகளை களமிறக்க கண்களில் கனவுடனும் கையில் பணப்பெட்டியுடனும் நிறை இரண்டாம் கட்ட தலைவர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். வழக்கம்போல் உடன்பிறப்பு வெறும் கனவுடன் கரைவேட்டியை மட்டும் சொந்தமாக்கிக்கொண்டு சுற்றி வருகிறார்கள்.

Similar News