மார்த்தாண்டத்தில் பாலம் சாத்தியமே இல்லை என வீம்பு பிடித்த தி.மு.க - சாத்தியமே என சாதித்த பொன்னார்!

மார்த்தாண்டத்தில் பாலம் சாத்தியமே இல்லை என வீம்பு பிடித்த தி.மு.க - சாத்தியமே என சாதித்த பொன்னார்!

Update: 2018-11-12 10:34 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி பல வருடங்களாக இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக கோரப்பட்டது. 2004 முதல் 2019 வரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவே இல்லை. 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் கன்னியாகுமரி பாராளமன்ற உறுப்பினர்கள் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாலம் குறித்து சில வருடங்களுக்கு முன்பு அறிக்கை விட்ட அப்போதைய கன்னியாகுமரியின் பாராளமன்ற உறுப்பினர் தி.மு.க-வை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் "மார்த்தாண்டத்தில் பாலம் வர சாத்தியமே இல்லை" என திட்டவட்டமாக கன்னியாகுமரி மக்களின் கோரிக்கையை மறுத்து வந்தார்.

2014 பாராளமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் அமோக வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆனார் பா.ஜ.க-வை சேர்ந்த பொன் இராதாகிருஷ்ணன். இவர் கன்னியாகுமரிக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறார். இதற்கிடையில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி செய்யவே முடியாது என மார்தட்டிய மார்த்தாண்டம் மேம்பாலம் பணியை கையில் எடுத்து 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்.
இதோ 34 மாதங்களில் பாலம் தயார். பாலம் பணி தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. அடுத்த மாதம் போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் திறக்கப்பட இருக்கிறது. வாகனங்கள் இயங்க தொடங்கிய பிறகு பொதுமக்கள் மேம்பாலத்தின் ஓடுதளத்தில் நடந்து சென்று பார்க்க முடியாது. எனவே பொதுமக்கள் மேம்பாலத்தின் ஓடுதளத்தை பார்க்கவும், அதில் நடந்து சென்று ரசிக்கவும் நேற்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை துவக்கி வைத்து தான் குமரியின் சாதனை நாயகன் தான் என மீண்டும் நிரூபித்துள்ளார் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன்.

Similar News