தி.மு.க பேரணி: நடிகர் - நடிகைகள், மாணவ - மாணவிகள், பொதுமக்கள் புறக்கணிப்பு! திமுகவினர் 5000-க்கும் கீழ்; போலீசார் 15000-க்கும் மேல்!

தி.மு.க பேரணி: நடிகர் - நடிகைகள், மாணவ - மாணவிகள், பொதுமக்கள் புறக்கணிப்பு! திமுகவினர் 5000-க்கும் கீழ்; போலீசார் 15000-க்கும் மேல்!

Update: 2019-12-23 07:41 GMT

தேசிய குடியுரிமை திருத்தச்சட்டதால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இங்கிருந்து துரத்தியடிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தூண்டுதலால், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மத வெறியர்கள், கலவரங்களை தூண்டி வருகின்றனர். அதற்கு பின்னணியில் இருந்து காங்கிரஸ், திமுக போன்ற கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் சென்னையில் பேரணி நடத்தியது. இதற்கு மாணவர்கள், நடிகர்கள் - நடிகைகள், விவசாயிகள் உள்பட 98 கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார்.


இந்த பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பேரணி, எழும்பூர் சி.எம்.டி.ஏ அலுவலகம் அருகில் தொடங்கியது. லேங்ஸ் கார்டன் சாலை, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானத்தை வந்தடைந்தது.


இதில் ஸ்டாலின், சிதம்பரம், வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


பேரணி மூலம் கலவரம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே உளவுத்துறை போலீசார் எச்சரித்து இருந்ததால், 110 கேமராக்கள் மற்றும் 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் திமுக பேரணி முழுவதையும் போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.


இந்த பேரணியில் 5000-க்கும் குறைவான திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாணவ – மாணவிகளும், நடிகர்கள் – நடிகைகளும், பொது மக்களும், திமுகவின் பேரணியை புறக்கணித்தனர். இந்தியாவின் மற்ற பகுதிகளில் நடந்த போராட்டங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஆனால் திமுக நடத்திய இந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையும் மிகப் பெரிய அளவில் இல்லை. சொற்ப அளவிலேயே அவர்கள் கலந்து கொண்டனர்.


ஆனால் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் 15,000-க்கும் அதிகமான ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News