மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?
மே மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 1.57 லட்சம் கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது நாட்டில் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு சேவை வரி 2017 - ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக வரி வசூல் குவிகிறது. அந்த வகையில் கடந்த மே மாதத்தில் ரூபாய் ஒரு லட்சதத்து 57,090 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி 28,411 கோடி ஆகும். மாநில ஜி.எஸ்.டி ரூபாய் 35,828 கோடியாகும் .
ஒருங்கிணைந்த ஜி.எஸ். வசூல் ரூபாய் 81 ஆயிரத்த 363 கோடி ஆகும். இதில் பொருள்கள் இறக்குமதிக்காக வசூல் செய்த ரூபாய் 41,772 கோடியும் செஸ் ரூபாய் 11,489 கோடியும் அடங்கும் . மே மாதத்தில் வசூல் ஆன ஜி.எஸ்.டி ரூ.1.57 லட்சம் கோடியை கடந்த ஆண்டின் இதே மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறுகிறது .
கடந்த ஆண்டு மே மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூபாய் 1. 41 லட்சம் கோடி தான். கடந்த மாதத்தில் உள்நாட்டு பரிமாற்றங்களை விட பொருள்கள் இறக்குமதியினால் வந்த வருமானம் 12 சதவீதம் அதிகமாகும். கடந்த ஏப்ரல் மாதம் ரூபாய் 1.87 லட்சம் கோடி என்ற சாதனை அளவை ஜி.எஸ்.டி வசூலில் நாடு கண்டது நினைவுகூரத்தக்கது.