இந்தியாவில் 5ஜி சேவை என்று தொடங்கப்படும் என தெரியுமா? நாள் குறித்த தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்

5ஜி சேவைகள் எப்போது துவங்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-26 07:59 GMT

5ஜி சேவைகள் எப்போது துவங்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தகவல் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் 5ஜி சர்வீஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாட்களாக நடந்து முடிந்தது, இதில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன மொத்தம் 1.50 லட்சம் கோடிக்கு அலைவரிசை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



இந்நிலையில் நேற்று 5 சேவை தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, '5ஜி சேவைகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறோம் அக்டோபர் 12ம் தேதிக்குள் அறிமுகப்படுத்துவோம். அதன் பிறகு மற்ற நகரங்களில் மேலும் விரிவுபடுத்தப்படும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு' என குறிப்பிட்டார்.


Source - Dinamalar



Similar News