டாஸ்மாக் நேரம் குறைப்பா? - மதுரை உயர் நீதிமன்றம் கூறியதென்ன?

டாஸ்மார்க் நேரத்தை குறைக்க முடியுமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-10-13 05:10 GMT

டாஸ்மார்க் நேரத்தை குறைக்க முடியுமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நடத்திய மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி ஆக குறைப்பது பற்றி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.

திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்யா 2019 ல் தாக்கல் செய்த பொது நலன் மனுவில் மதுவின் தீமைகள் குறித்தும் டாஸ்மாக் கடைகள் முன்பு போதை குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்க தமிழில் விலை பட்டியல் வைக்க வேண்டும், புகார் செய்ய வசதி வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற உத்தரவிட வேண்டும் என மனு செய்தார்.

இம்மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது அப்போது திருச்செந்தூரில் ஒரு பள்ளி அருகே 2019 ம் ஆண்டு டாஸ்மாக் கடையில் சில மாணவர்கள் அது அருந்துவது போன்ற போட்டோவை ராம்குமார் தரப்பு வழங்கியது இது தொடர்பாக கருத்து கூறிய நீதிபதிகள் பொதுநலன் கருதி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி ஆக குறைப்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் விபரம் பெற்று அக்டோபர் 27 தெரிவிக்க வேண்டும் எனவும் மனதார தரப்பில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.


Source - Dinamalar

Similar News