மாட்டிறைச்சி என்ற பெயரில் சென்னைக்கு வந்த 1 டன் நாய் கறி பறிமுதல் : எந்த பிரியாணி கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது?

மாட்டிறைச்சி என்ற பெயரில் சென்னைக்கு வந்த 1 டன் நாய் கறி பறிமுதல் : எந்த பிரியாணி கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது?

Update: 2018-11-17 11:15 GMT
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் தொடர் வண்டியில் 20 பெட்டிகளில் இரண்டு டன் மாட்டு இறைச்சி என்ற பெயரில் இறைச்சி வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ள யாரும் வராததாலும், அதே நேரத்தில் அதில் அழுகிய வாடை வீசியதாலும் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்தப் பெட்டியில் இருந்த இறைச்சியில் நாயின் வாலைப் போன்ற உறுப்பு இருந்ததால் அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அதேநேரத்தில் அந்த இறைச்சியை கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மாதிரிகளை சோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமிருந்த இறைச்சியை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கறிகளை அனுப்பியவர் யார்....? எங்கிருந்து அனுப்பி உள்ளனர்..? யாருடைய பெயரில் சென்னைக்கு பார்சல் வந்து உள்ளது..? சென்னையில் எந்தெந்த ஓட்டலுக்கு இதுவரை இந்த நாய்க்கறி சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த முழு தகவல் கிடைக்கப்பெரும் தருணத்தில், சிக்கன் மட்டன் என நம்பி எந்தெந்த கடையில் இது போன்ற நாய் பிரியாணி வழங்கப்பட்டு வந்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வரும்.
Inputs from News18 Tamilnadu and Asianet Tamil

Similar News