கோபாலபுர குடும்பத்துக்கு அடிமை வேலை பார்க்காம அமைச்சர் வேலை பாருங்க - சேகர்பாபுவை கிழித்த அண்ணாமலை

கோவில் சுவற்றில் அமர்ந்து மது குடித்தவர்களை தட்டி கேட்ட கோவில் ஊழியரை வெட்டி கொலை செய்யும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு

Update: 2023-01-19 12:07 GMT

கோவில் சுவற்றில் அமர்ந்து மது குடித்தவர்களை தட்டி கேட்ட கோவில் ஊழியரை வெட்டி கொலை செய்யும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு தலைவிரித்தாடுகிறது, திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த இந்து சமய அறநிலைத்துறை ஊழியர் கிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பணிபுரிந்து வருகிறார். அந்த கோவில் சுற்றுசுவரில் சிலர் அமர்ந்து மது அருந்துவதை தட்டி கேட்டதால் கோவில் வளாகத்துக்குள்ளையே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படி கோவில் ஊழியர் மது குடித்தவர்களை தட்டி கேட்டதால் கொடூரமாக வெட்டி அதுவும் கோவிலுக்குள்ளே வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து இந்த நிமிடம் வரை அறநிலையத்துறை அமைச்சர் சேகரபாபுவோ, முதல்வர் ஸ்டாலினோ கருத்து தெரிவிக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்த செய்திகளையும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக வெளியே வரவில்லை எனவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை ஆளும் தி.மு.க அரசின் தரப்பிலிருந்து தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் யாரும் கருத்து தெரிவிக்கவும் இல்லை நேரில் சென்று பார்வையிடவும் இல்லை. வாய்மூடி மௌனமாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் களத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டு வரும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் அறிக்கையில் குறிப்பிடும் பொது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதல்வர் குடும்பத்தை மகிழ்விப்பதை விட்டுவிட்டு சேகர்பாபு கோவில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை தர வேண்டுமென ஆக்ரோஷமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.

இந்த நிலையில் இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 'நெல்லை மேல சேவல் கிராமத்தை சேர்ந்த இந்து சமய அறநிலைத்துறை ஊழியர் கிருஷ்ணன் கோவில் சுற்றுச்சுவரில் அமர்ந்து மது அருந்ததி தட்டி கேட்டதால் கோவில் வளாகத்துக்குள்ளே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாக சீர்குலைந்து கிடக்கிறது என்பது ஒரு புறம் கோவில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளையும் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை கோவில் உண்டியல் பணத்தை மட்டும் நோக்கமாக வைத்து கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் சாராயக்கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வது இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்கள் கூறிய காரணமாக அமைந்திருக்கிறது, இனியும் கோபாலபுரம் குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்று இருக்காமல் உடனடியாக அமைச்சர் திரு.சேகர் பாபு கோவில் ஊழியர்களுக்கும் உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் உடனடியாக தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகின்றோம்' என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கோவிலில் வேலை செய்யும் அப்பாவி ஒருவர் மது அருந்தியதை தட்டி கேட்ட காரணத்தினால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க தரப்பிலிருந்து இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை என்பது முக்கியமான விஷயமாகும், மேலும் மக்கள் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



Source - Annamalai Tweet 

Similar News