சுனாமி நினைவு தினம் - பா.ஜ.க சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார் Dr.தமிழிசை

சுனாமி நினைவு தினம் - பா.ஜ.க சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார் Dr.தமிழிசை

Update: 2018-12-26 12:01 GMT
ஆழிக்கடலலை என்று அழைக்கப்படும் சுனாமி அலை தமிழக கடற்கரையை தாக்கி 20,0000 பேர்களுக்கு மேல் கடலுக்குள் இழுத்துச் சென்று கொன்று விட்டது. இந்த துயரகரமான சம்பவம் நடைபெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நினைவு தினத்தில் கடலுக்கு சென்று பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. பா.ஜ.க சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் கடலில் பால்  ஊற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கடலில் பால் ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

https://twitter.com/DrTamilisaiBJP/status/1077810623742918656?s=20
அப்போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர் "ராகுலை ஸ்டாலின் முன்னிறுத்தியதால் தான் மூன்றாவது அணி உருவாகி உள்ளதாகத் தெரிவித்தார். அதனால் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு இல்லை என்றும் காங்கிரசுக்குத் தான் பின்னடைவு என்றும் கூறினார். 3 மாநிலங்களில் காங்கிரசுக்கு வாக்களித்ததற்காக மக்கள் வேதனைப் படுவதாகவும் அவர் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் மீட்புப் பணிகளுக்கு செல்லாத மு.க.ஸ்டாலின் கிராம சபைக்காக பா.ஜ.க. பற்றி கூற தெருத்தெருவாக செல்ல இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

Similar News