பொள்ளாச்சியில் சிக்கிய 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் - போதையின் அகோர பிடியில் தமிழகம்

பொள்ளாச்சியில் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் காவல்துறையிடம் சிக்கியுள்ளது.

Update: 2022-10-18 13:51 GMT

பொள்ளாச்சியில் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் காவல்துறையிடம் சிக்கியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் கொண்டாம்பட்டி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சில மர்ம நபர்கள் போதைப் பொருட்களை விற்பதாக கோவை மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களுக்கும், போதை பொருள் தடுத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மாற்று உடையில் கிணத்துக்கடவு வரை பெரும்பாலத்தின் கீழ் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டதில் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்த போலீசார் சந்தேகத்தக்கிடமான பொருட்களை வைத்திருக்கிறார்களா என ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று ஆய்வு செய்து அவர்கள் பையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்ப் இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் நாராயணன், மற்றும் ராம்குமார் என்பதும் அதே ஊரைச் சேர்ந்த கிஷோர் அகமது என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் கைது செய்து இருவரிடம் இருந்து 5 லட்சத்து மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர்.


Source - News 18 Tamil Nadu

Similar News