வரி செலுத்துவதை ஊக்குவிக்க மின் சரிபார்ப்பு திட்டம்!

வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும் வெளிப்படையான மற்றும் வரி நிர்வாகத்தை எளிதாக்குவதற்கும் மின் சரிபார்ப்பு திட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2023-03-29 11:45 GMT

தன்னார்வ வரி செலுத்துவோரை ஊக்குவிப்பதற்கும் வெளிப்படையான மற்றும் வரி நிர்வாகத்தை எளிதாக்குவதற்கும் வருமானவரித்துறை பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்தகைய முக்கிய முயற்சிகளில் ஒன்று மின் சரிபார்ப்பு திட்டம் - 2021 .கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் வருமானவரி கணக்கில் காண்பிக்கப்படாத, தெரிவிக்கப்படாத அல்லது குறைத்து காண்பிக்கப்பட்டதாக தோன்றும் நிதி பரிவர்த்தனை பற்றிய தகவலை வரி செலுத்துவோருடன் பகிர்ந்து கொள்வதும் சரி பார்ப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் .


மின் சரிபார்ப்பின் முழு செயல்முறையும் டிஜிட்டல் முறையிலானது. மின்னணு முறையில் அறிவிப்புகள் மற்றும் வரி செலுத்துவோரின் பதில்கள் மின்னணு வகையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. விசாரணை முடிந்ததும் வரி செலுத்துபவருடன் எந்த வித நேர் இடைமுகமும் இல்லாமல் மின்னணுமுறையில் சரி பார்ப்பது தயாரிக்கப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு நிதி பரிவர்த்தனையை ஆதாரத்துடன் விளக்க இத்திட்டம் உதவுவதால் வரி செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.


இத்திட்டம் தகவல்களை திருத்தம் செய்வதற்கும் உதவுகிறது மற்றும் அதன் மூலம் தவறாக புகார் அளிக்கப்பட்ட தகவலின் மீதான நடவடிக்கைகளை தொடங்குவதை தடுக்கிறது. மேலும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் வரி செலுத்துபவருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதால் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த வருமான வரி படிவத்தில் சரியான முறையில் தெரிவிக்கப்படாத வருமானத்தை சரி செய்ய புதுப்பிக்க இது ஒரு வாய்ப்பாக வழங்கப்படுகிறது . சோதனை அடிப்படையில் 2019-20 நிதியாண்டு தொடர்பான சுமார் 68 ஆயிரம் வரி செலுத்துவோரின் நிதி பரிவர்த்தனைகளின் தகவல்கள் மின் சரிபார்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.


இதுவரை சுமார் 35 ஆயிரம் வரி செலுத்துபவரின் தகவல்கள், நியமிக்கப்பட்ட இயக்குனரகத்தால் மின் சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் மற்றும் அதில் உள்ள பல்வேறு செயல்முறைகளை அறிந்து கொள்ள www.incometax.gov.in என்ற இணையதள பகுதியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று டெல்லி வருமான வரி முதன்மை கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.





 



 


Similar News