வேலூரில் 1 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு ? தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு!!

வேலூரில் 1 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க முடிவு ? தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு!!

Update: 2019-06-24 05:29 GMT


தமிழகத்தில், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த, 38 தொகுதிகளில், 37 தொகுதிகளை, தி.மு.க., கூட்டணி வென்றது. வேலுார் தொகுதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் வேட்பாளராக போட்டியிட்டார். இங்கே, தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில், வருமான வரித்துறை, 'ரெய்டு' நடத்தியது. இதில், கணக்கில் வராத, 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், தேர்தல் ஆணையம் வேலூரில் தேர்தலை ரத்து செய்தது. 


சமீபத்தில், புதிய மக்களவை பதவியேற்றுள்ள நிலையில், வேலூரில் தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த முறை, பணம் பட்டுவாடா ஏதும் நடக்காமல் இருக்க, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இதற்காக, அதிக அளவில் தேர்தல் பார்வையாளர்களை நியமிக்கவிருக்கிறது. ஒரு மாதத்திற்குள், வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து, ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது


Similar News