நாகை கோயில் நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு - அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நாகை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-02 07:45 GMT

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "நாகப்பட்டினத்தில் பதினாறாம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்கரால் நவநீதகிருஷ்ண சாமி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான தேரை நிறுத்த தனியாக ஒதுக்கப்பட்ட நிலத்தை ராமமூர்த்தி அவரது மனைவி லலிதா ஆகியோர் ஆக்கிரமித்து ஸ்ரீ லலிதாம்பிகை திருமண மண்டபத்தை கட்டியுள்ளனர் .இதற்கு முறையான அனுமதியை பெறவில்லை இதனால் கோவில் தேர் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தேர்ந்தெடுத்தும் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை எடுத்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் திருமணம் மண்டபம் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் "என்று கூறியிருந்தார் .


இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ் .வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.கே சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் இந்த நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அறநிலையத்துறை இன்று விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டது .இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மேல் முறையீடு வீதி இன்று சட்டப்படி முடிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறநிலை துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Similar News