களைகட்டிய சௌராஷ்டிரா தமிழ் சங்கம கொண்டாட்டம்!
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை நோக்கிய உற்சாகம் அதிகரித்து வருகிறது என்ற பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நாளை தொடங்கி வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்பவர்களுக்காக மதுரையில் இருந்து சௌராஷ்டிரா சங்கமத்திற்கு செல்லும் முதல் சிறப்பு ரெயிலை தமிழக கவர்னர் ஆல்.என்.ரவி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் "இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில் மதுரையிலிருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது.
சௌராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பாக்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகவும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது" என பதிவிட்டுள்ளார் .மற்றொரு பதிவில் சௌராஷ்ட்ரா சங்கத்திற்காக பயணம் ஏற்படுத்திய சூழல் குறித்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி சௌராஷ்டிரா சங்கமத்தை நோக்கிய உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கூறியுள்ளார். 23ஆம் தேதி மதுரையிலிருந்து குஜராத் மாநிலம் வெறவலுக்கு தினசரி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.