கொப்பரை தேங்காய் கொள்முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு - வானதி சீனிவாசன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

டெல்லி விவசாயிகளின் நலனுக்காக கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு தகவல்

Update: 2022-08-30 05:30 GMT

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்த உயர்த்தவும், கொள்முதலை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவும் விவசாயிகளுக்காக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்து நடவடிக்கை எடுத்ததன் பலனாக தென்னை விவசாயிகளின் நலனுக்காக கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோவை, திருப்பூர் ,ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை நாமக்கல், தர்மபுரி திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் 12300 தென்னை விவசாயிகளிடமிருந்து நேரடியாக 14 ஆயிரத்து 800 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஆறு மாதத்திற்கு மட்டுமே கொள்முதல் மேற்கொள்ளப்பட்டதால் ஜூலை 31 ஆம் தேதிக்குப் பின் வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை தேங்காய் விலை குறைந்தது.

தமிழக விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான கால அளவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். 


இதன் காரணமாக தென்னை விவசாயிகளின் நலனுக்காக கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு 110 க்கும் அரவை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 105.90 க்கும் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் செலுத்தப்படும் .


தற்போது வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காய் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் அனைவரும் கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தில் இணைந்து பயனடைய வேண்டும் அரசு அறிவித்துள்ளது.





 



 


Similar News