நேரடி வரிகள் வாரிய தலைவர் பதவிக்காலம் ஒன்பது மாதம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

நேரடி வரிகள் வாரிய தலைவரின் பதவி காலம் 9 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-10-01 14:15 GMT

வருமானவரித்துறையை உள்ளடக்கிய உச்ச கொள்கை வகுக்கும் அமைப்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளது. ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த வாரியத்தின் தலைவராக நிதின் குப்தா உள்ளார். 1986 ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரியான நிதின் குப்தா மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.


நிதின் குப்தா நேற்று ஓய்வு பெற்றிருந்த நிலையில் அவருக்கு மேலும் 9 மாத காலம் பதவி நீட்டி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் அவரை மறுநியமனம் செய்வதற்கு மத்திய மந்திரி சபையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதின் குப்தா அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி அல்லது மறு உத்தரவு வரும் வரை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக இருப்பார். மத்திய அரசின் செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Similar News