இந்தியா-சீனா இடையே ஆன சமூக உறவுக்கு மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய கருத்து என்ன?

இந்தியா சீனா இடையேயான சமூக உறவுகளுக்கு எல்லையில் அமைதியும், நிலைத்தன்மையும் அவசியம் தேவை என மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

Update: 2022-10-27 10:30 GMT

லடாக் மோதலைத் தொடர்ந்து இந்தியா சீனா இடையேயான உறவுகள் சுமூகமாக இல்லை. எனவே எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை திருப்ப பெற்று அமைதியை நிலை நிறுத்துவது தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதன் பலனாக ஒரு சில இடங்களில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டு விட்டன. ஆனாலும் மேலும் சில இடங்கள் இன்னும் படைகளின் கண்காணிப்பிலேயே உள்ளன. இதனால் இந்திய சீன உறவுகள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான சுமூக வரவுக்கு எல்லைகள் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவுக்கான சீன தூதர் சுன் வெய்டாங்கின் பணிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து அவருக்கான பிரிவு உபச்சார செய்தியில் ஜெய்சங்கர் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

சீன தூதர் சுன்  வெய்டாங்கிடம் இருந்து  ஒரு பிரிவு உபசார அழைப்பு வந்தது. அப்போது நான், இந்தியா சீனா உறவுகளின் வளர்ச்சி மூன்று பரஸ்பர அம்சங்களால் வழிநடத்தப்படுகிறது என்பதை வலியுறுத்தினேன். அதாவது பரஸ்பர உணர்வு , பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகும். இரு நாடுகளுக்கு இடையே ஆன சுமூக உறவுகளுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் அத்தியாவசிய தேவை. இந்தியா, சீனா இடையேயான சமூக உறவுகள் இரு நாடுகளின் நலனுக்கானது மட்டுமின்றி ஆசியா மற்றும் உலகம் முழுவதற்கும் தேவையும் கூட இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


முன்னதாக சமீபத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுன் வெய்டாங் சீனா இந்திய இடையேயான சில வேறுபாடுகள் இருப்பது இயற்கையானது.ஆனால் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் அதே வேளையில் வளர்ச்சிக்கான பொதுவான தளத்தை தேடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.





 


Similar News