மக்களை இணைக்கிறோம் என்கிற அடைமொழியுடன் எழுந்த "நோக்கியா" - வளர்ந்த கதை..

மக்களை இணைக்கிறோம் என்கிற அடைமொழியுடன் எழுந்த "நோக்கியா" - வளர்ந்த கதை..

Update: 2020-04-08 01:51 GMT

நோக்கியா அலைபேசி. "மக்களை இணைக்கிறோம்" என்ற வாசகத்துடன் சந்தைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்ற சாதனம். ஆனால் நோக்கியா என்ற நிறுவனம், வெறும் அலைபேசிகளை மட்டும் தயாரிப்பவர்கள் அல்ல. தன் வரலாற்றை காகிதம் தயாரிக்கும் துறையில் துவங்கி, இன்று உலகமே உள்ளங்கையில் வைத்து கொண்டாடும் அலைபேசி நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்ப, வியாபரத்தை விரிவுப்படுத்துதல் என்பது வெற்றிக்கான முக்கிய உத்தி. அதை சரியாக கையாண்டுள்ளது நோக்கியா. சரியான நேரத்தில், புதுமையான சிந்தனைகளை சந்தைப்படுத்திய விதமும், புதிய துறையில் கால் பதிக்க முனைந்த துணிச்சலும், நோக்கியாவை முதன்மை வரிசையில் இடம் பெற செய்தது. அலைப்பேசி துறையில் கோலோச்சிய "நோக்கியா" குறித்த சுவாரஸ்யமான குறிப்புகள் இங்கே.....

1. புகழ்பெற்ற நோக்கியா காலர் டியுன் 19 ஆம் நூற்றாண்டில், கிட்டார் இசைக்கருவி மூலம் உருவாக்கப்பட்டது அந்த குறிப்பிட்ட டியுனிற்க்கு "கிரான் வால்ஸ்" என்று பெயர். இதை இசையமைத்தவர், ஸ்பானிஷ் இசை கலைஞர் பெயர் "பிரான்ஸிஸ்கோ". நோக்கியா அலைப்பேசிகளிலும் "கிரான் வால்ஸ்" என்ற பெயரிலேயே இந்த டியுன் இடம் பெற்றிருந்தது. ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, 1998 முதல் அனைத்து கைப்பேசியிலும் இதை "நோக்கியா டியுன்" என்றே குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

2. , தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 4 என்ற எண் அதிர்ஷடமற்றதாக கருதப்படுவதால், ஆசிய நாடுகளில், நோக்கிய வெளியிடும் எந்த அலைப்பேசி மாடலுக்கும், 4 என்ற எண் வருமாறு பெயரிட மாட்டார்கள்.

3. 2006 ஆம் ஆண்டு பார்ட்ச்சியூன் (Fortune) நாளிதழ் வெளியிட்ட பட்டியலில், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து, 20 ஆம் இடத்தில் இருக்கும் நிறுவனம் நோக்கியா என்று அறிவித்திருந்தது.

4. நோக்கியா நிறுவனம், அதன் துவக்க காலத்தை காகிதம் தயாரிக்கும் பணியில் துவங்கியது. அதை தொடர்ந்து எலக்ட்ரானிக் சாதனங்கள், டயர்களுக்கான ரப்பர் வேலைப்பாடுகளில் கால் பதித்துள்ளது. அதையொட்டி கேபிள் துறை, அதாவது தொலைபேசி, மின் இணைப்பு போன்றவற்றிற்க்கு பயன்படுத்தப்படும் கேபிள் சாதனங்களை தயாரித்துள்ளது. உலகின் முன்னனி காமரா உற்பத்தியாளர்களும் இவர்களே.

5. ஹெல்சின்கி என்ற இடத்தில், 1991 ஆம் ஆண்டு பின்லாந்த் நாட்டின் பிரதமர் "ஹாரி ஹோல்கேரி" என்பவரால் GSM தொழிநுட்பத்தின் உதவியோடு, நோக்கிய அலைப்பேசியிலிருந்து முதல் அழைப்பு விடுக்கப்பட்டது.

6. நோக்கியா அறிமுகப்படுத்தும் மாடல்களை எண்களை கொண்டு குறிப்பது வழக்கம். ஆனால் வளைகுடா நாடுகளில் எண்களை கொண்டு மாடல்களை நினைவு வைத்து கொள்வது சிரமமாக கருதப்படுவதால். அந்த பகுதிகளில், நோக்கியா 6600 என்ற மாடலுக்கு "பாண்டா" என்றும் 6630 என்ற மாடலுக்கு "ஃபாரிஸ்" என்றும், 6680 என்ற மாடலுக்கு ஷைட்டான் என்றும் பெயராம்.

7. 1982 அலைப்பேசி உற்பத்தியை துவங்கிய நோக்கிய, இதுவரை 500வகையான அலைப்பேசிகளை உருவாக்கியுள்ளது. வேறு எந்த நிறுவனமும் இத்தனை மாடல்களை அறிமுகம் செய்ததில்லை. 2003 ஆம் ஆண்டு சந்தைக்கு வந்த மாடலான 1100 உலகில் அதிகம் விற்றுதீர்ந்த அலைபேசியாக கருதப்படுகிறது.

8. சில வருடங்களுக்கு முன்பு வரை, ஒவ்வொறு வருடமும் மொத்தம் 210 மில்லியன் அலைப்பேசிகளை உற்பத்தி செய்து வந்தது நோக்கியா. அதாவது ஓர் நொடிக்கு 6.5 போன்களை தயாரித்து வந்துள்ளது.

9. ஐரோப்பாவில், பின்லாந்த் நாட்டில் ஓர் நகரத்தில் பாய்கிற நதிக்கு "நோக்கியன்விர்டா" என்ற பெயர். இது ஃபீன்னிஷ் வார்த்தை. இந்த நதியின் பெயரையே மூலமாக கொண்டு பெயரிடப்பட்டது தான் நோக்கியா நிறுவனம். 

Similar News