தவிடு பொடியான எதிர்கட்சிகளின் பொய்யுரைகள்: காஷ்மீரில் கடந்த 2 மாதத்தில் 10 ஆயிரம் புதிய தொலைபேசி இணைப்புகள்.!

தவிடு பொடியான எதிர்கட்சிகளின் பொய்யுரைகள்: காஷ்மீரில் கடந்த 2 மாதத்தில் 10 ஆயிரம் புதிய தொலைபேசி இணைப்புகள்.!

Update: 2019-10-02 07:20 GMT

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதுக்கு பின்னர் அங்கே அடக்குமுறை கையாளப்படுவதாக எதிர் கட்சிகள் பொய்யுரைகளை வீசிவருகின்றன. உண்மையில் அங்கு என்ன நடந்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.


காஷ்மீர் மாநில பயங்கரவாதத்தால் மட்டும் 41 ஆயிரத்து 800 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதே நிலை இனியும் தொடரக்கூடாது என்ற நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் காஷ்மீர் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான், திமுக, காங்கிரஸ் தவிர இந்த நடவடிக்கைக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு விஷம செய்திகளை மக்கள் மனதில் விதைத்து வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படுவதாக பொய் செய்தி பரப்பி வருகின்றன.


உண்மையாக சொல்லப்போனால், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கே 10 ஆயிரம் புதிய தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரம் பொது தொலைபேசி இணைப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வன்முறை வெடிக்க கூடாது என்ற நோக்கில் மட்டுமே இணைய சேவை முதலில் தடை செய்யப்பட்டது. காஷ்மீர் எல்லைக்கு உட்பட்ட 196 காவல் நிலையங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள 8 இடங்களில் மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News