விக்ரம் லேண்டரை வடிவமைத்ததாக கூறிய போலி விஞ்ஞானி கைது
விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாக கூறி பொய் பிரச்சாரம் செய்த சூரத் நகரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.;
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு செய்துவரும் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற இளைஞர் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்ததாகவும் கூறினார். இது தொடர்பான புகாரின் பெயரில் மிதுல் திரிவேதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விசாரணையில் மிதுல் திரிவேதிக்கும் இஸ்ரேவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் அவர் கூறியது அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து போலி விஞ்ஞானி மிதுல் திரிவேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
SOURCE :DAILY THANTHI