5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

Update: 2019-11-21 10:08 GMT

பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.


பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொருளாதார மந்தநிலை மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டன. 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் அரசின் வசமுள்ள 53 புள்ளி 29 விழுக்காடு பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதேபோல், கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வசமுள்ள பங்குகளில் 53 புள்ளி 75 சதவீதத்தை விற்பனை செய்வதற்கும், கான்கார் எனப்படும் சரக்குப் பெட்டக கழகத்தில் 30 புள்ளி 9 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


Similar News