வீட்டில் மீன் வளர்ப்பும், வாஸ்து சாஸ்திரம் கூறும் அறிவுரைகளும்.
அது குறித்த சில அடிப்படை விதிகள்.;
வாஸ்து குறித்து முழுமையாக தெரியாதவர்களுக்கும், அது குறித்த சில அடிப்படை விதிகள் தெரிந்திருக்கும். அதன் அடிப்படையில், ஒரு வீடு, அலுவலகம் அல்லது எந்தவொரு கட்டிடமாக இருந்தாலும் அதற்குரிய ஆற்றல் வளையம் உண்டு. அதை நேர்மறை ஆற்றலாக மாற்ற வாஸ்து துணை புரியும்.
புவியியல் மற்றும் ஜோதிட கணக்குகளை முறையாக பயன்படுத்தி அமைக்கப்படுகிற இல்லத்தில் நேர்மறை அதிர்வுகள் நிரம்பியிருக்கும். இந்த வாஸ்து குறிப்புகள் தவறுகிற போது, வீட்டில் நிம்மதியில்லாமை, உடல் நல குறைபாடு, தம்பதியினருள் கருத்து மோதல் போன்ற தொடர் பிரச்சனைகளை ஒருவர் எதிர்கொள்ள கூடும்.
ஆனால் கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் சில சமயங்களில் வாஸ்து தோஷம் ஏற்படலாம். அப்போதிருக்கும் சவால் யாதெனில், அந்த கட்டிடத்தை தகர்காமல், சேதப்படுத்தாமல் அதனை சரி செய்ய வேண்டும். இந்த சூழலில் தான் நாம் செடிகள், செல்ல பிராணிகள் வளர்த்தல், ஓவியம், போன்றவற்றை பயன்படுத்தி வாஸ்து தோஷத்தை சரி செய்யலாம் என்கிறது சாஸ்திரம்.
இதில் இன்று நாம் மீன் வளர்ப்பு ஏற்படுத்தும் வாஸ்து தாக்கங்கள் குறித்த காணவிருக்கிறோம். அறிவியலின் படி, மீன் தொட்டியில் மீன் வளர்ப்பதாலும், அது நீரில் நீந்தி செல்வதை தொடர்ந்து ஒருவர் கவனிப்பதாலும், அவருக்கு மனஅழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராகும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர். அதனுடைய இயல்பான அழகு, ஒருவரின் மனநிலையில், சிந்தனை ஓட்டத்தில் ஒருவித அமைதியை ஏற்படுத்துகிறது. நம்முடைய நரம்பு மண்டலங்களை சீராக வைக்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மீன் தொட்டியில் இருக்கும் நீர் ஓட்டம், ஒருவரின் வாழ்கை எந்தவித தடையுமின்றி இயங்குவதை குறிக்கிறது. அந்த நீரினுள் மீன்கள் நீந்தி வருவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக மீன்களின் நிறம் ஒவ்வொரு விதமான ஆற்றலை நமக்கு வழங்குகிறது.
நீரின் ஓட்டமும், மீனின் நீந்தலும் பண வரவு தொடர்ந்து ஒரு நீரோட்டம் போல இயல்பாக தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது. அதிக அளவிலான மீன்கள் இருப்பது, அதிக அளவிலான பண வரவை குறிக்கிறது. ஒரு வேளை நாம் வளர்க்கும் மீன் இறந்துவிட்டால், பதட்டமடைய தேவையில்லை. தீய திருஷ்டிகளின் அறிகுறி எனவே, இறந்த மீனை உடனடியாக அப்புறப்படுத்திவிடுதல் நலம்.
மீன் தொட்டியை வீட்டின் மையத்தில் அதாவது ஹாலில் வைப்பது அதிக அளவிலான நன்மையை தரும். வட கிழக்கு, தென் கிழக்கு ஆகிய இடங்களில் வைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி பரிந்துரைக்கப்படும் எண்ணிக்கை யாதெனில் ஒன்பது மீன்கள் இருப்பது நன்மை தரும்.
Image Source : istock.com