டைட்டானிக் கப்பலில் ஏற்பட்ட மர்ம மரணம் - சர்வதேச அமைப்புகள் விசாரணை!

டைட்டானிக் கப்பலை காணச் சென்ற ஐந்து பேர் பலியானது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் விசாரிக்கின்றன

Update: 2023-06-27 05:45 GMT

வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் 'டைட்டானிக்' கப்பலின் மிச்சங்களைக் காண 'டைட்டன்' என்ற நீர் மூழ்கியில் கோடீஸ்வரர்கள் ஐந்து பேர் சென்றனர். கடந்த 18- ஆம் தேதி ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய இந்த நீர்மூழ்கி மாயமானது. பின்னர் அது உள்வெடிப்பை சந்தித்து விபத்துக்குள்ளானதையும் அதில் சென்ற ஐந்து பேரும் பலியாகிவிட்டதையும் அமெரிக்க கடலோர காவல்படை உறுதி செய்தது.


இந்த நிலையில் டைட்டன் நீர்மூழ்கி விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல் படை ,அமெரிக்க தேசிய போக்குவரத்து அமைப்பு வாரியம், கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரான்ஸ் கடல் விபத்து மரண விசாரணை வாரியம் மற்றும் இங்கிலாந்து கடல் விபத்து விசாரணை பிரிவு ஆகியவை இணைந்து விசாரணை நடத்துகின்றன.


இது தொடர்பாக அமெரிக்க கடலோர காவல் படையின் கேப்டனும் அதன் தலைமை விசாரணை அதிகாரியுமான ஜேசன் நியூபார் நேற்று முன்திடம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் விபத்து நடந்த கடல் அடி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எதனால் நீர் மூழ்கியில் உள் வெடிப்பு ஏற்பட்டது என்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் .


இந்த விசாரணை எப்போது முடிவடையும் என்று விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை .ஆனால் ஆழ்கடலில் 12,500 அடிகள் கிடைக்கும் நீர்மூழ்கியின் சிதைவுகள் குறித்து விசாரிப்பதற்கு அதிக சிரமமும் நீண்ட காலமும் ஆகும் என்று விசாரணை வட்டாரங்கள் தெரிவித்தன.

Similar News