பறக்கும் ரயில் வரும் ஜனவரி முதல் ஆதம்பாக்கம் வரை பறக்கும் !! நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு சிறப்பான வசதி!!

பறக்கும் ரயில் வரும் ஜனவரி முதல் ஆதம்பாக்கம் வரை பறக்கும் !! நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு சிறப்பான வசதி!!

Update: 2019-07-26 12:06 GMT


வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான பாதையில் எம்ஆர்டிஎஸ் ரெயில் வரும் ஜனவரியில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் ரெயில் திட்டத்தில் வேளச்சேரியில் இருந்து புனித தாமஸ் மலை வரையிலான 2.5 கி.மீ. தொலைவி லான பாதையில் ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பாதை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.


இந்த பாதையில் நிலம் கையகப்படுத்து வது தொடர்பாக நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால் 8 ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்தை தொடங்க முடிய வில்லை. இந்நிலையில் நிலம் ஆர்ஜிதப் படுத்துவதற்காக காலவரையின்றி காத்திருக்காமல் ஆதம்பாக்கம் வரை பணி முடிந்துள்ள நிலையங்களுக்கு இடையே ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை 2 நிலையங் களுக்கான கட்டுமானப்பணிகள் மற்றும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.


நடைமேடை அமைக்கும் பணி மற்றும் மேல்மட்டத்தில் மின்சார கம்பிகள் இழுக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் ஆதம்பாக்கம் வரை அடுத்த சில மாதங் களில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே புத்தாண்டில் இது தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக் கத்திற்கு ஒருவழிப்பாதையில் ரெயில் சென்று அதே வழியில் திரும்பிவரும். இப்போது கடற்கரை முதல் திருவான்மியூர் வரை எப்படி ஒருவழி தடத்தில் எப்படி ரெயில் சென்று வருகிறதோ? அதே முறை பின்பற்றப் படும் என்றும் கூறியுள்ளனர்.


ஆதம்பாக்கம் வரை ரெயில் சென்றால் தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், மடிப் பாக்கம், வானுவாம்பேட்டை, சதாசிவம் நகர் ஆகிய பகுதி மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும்.


இங்கிருந்து மயிலாப்பூர், சேப்பாக்கம், கோட்டை மற்றும் கடற்கரைக்கு நேரடி ரெயில் இணைப்பு கிடைக்கும். தற்போது இப்பகுதி மக்கள் புனித தாமஸ்மலை ரெயில் நிலையம் வரை பஸ்சில் வந்து அங்கிருந்து தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரைக்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News