முதன் முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் இந்தியா வருகிறது என் தெரியுமா?

இந்தியாவில் முதன்முறையாக அமெரிக்கா கடற்படை கப்பல் பழுது நீக்குவதற்காக சென்னை வருகை

Update: 2022-08-06 06:30 GMT

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் முனையும் உள்ளது. இந்த முனையத்திற்கு அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று பழுது நீக்குவதற்காக வர உள்ளது.

இந்த கப்பல் தளவாடங்களை சுமந்து செல்லும் கப்பல் ஆகும். தற்போது இந்த கப்பலில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி கப்பல் முனையத்திற்கு நாளை வர உள்ளது.

இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார் பங்கேற்கிறார். இந்தியா அமெரிக்கா இடையேயான நல்லுறவு ஒரு அம்சமாக இந்த நிகழ்வானது நோக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று பழுது நீக்குவதற்காக வருவது இதுதான் முதன் முறையாகும். இந்த தகவலை மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.





 


Similar News