ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு மணமுடிக்கப்பட்ட பயங்கரம் : பாகிஸ்தானில் அரங்கேறிய இஸ்லாமிய மதவெறி கொடூரம்

ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு மணமுடிக்கப்பட்ட பயங்கரம் : பாகிஸ்தானில் அரங்கேறிய இஸ்லாமிய மதவெறி கொடூரம்

Update: 2019-03-24 18:32 GMT

1947 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் பிரிந்தது. அப்போதிலிருந்து அங்கு வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே வருகிறது.


அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில், கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீனா (வயது 13), ரீனா (வயது 15) ஆகிய சகோதரிகளை ஹோலி பண்டிகையன்று உள்ளூர் இஸ்லாமிய மத வெறியர்கள் கடத்தியுள்ளனர்.


இரண்டு மைனர் சிறுமிகளும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய இளைஞர்களுக்கு மணம் முடித்து வைக்கும் வீடியோ ஒன்று அன்றைய தினமே வைரலானது. இது அங்கு வாழும் ஹிந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர், உள்ளூர் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.




https://twitter.com/nailainayat/status/1108714794801090560?s=19
Tweet by Naila Inayat, Pakistan Journalist


மைனர் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களுக்கு மணமுடிக்கப்பட்ட காணொளி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




https://twitter.com/VeengasJ/status/1109056233389068288?s=19
Tweet by Veengas, Author of The Rise News


இந்த அநீதியை அடுத்து, பெண்களை பெற்றெடுத்த தந்தை, காவல் நிலையத்தின் முன்பு கதறி கதறி அழுதார். நீதி கிடைக்காத விரக்தியில் முதியவர் கதறி அழுத காணொளி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்க செய்கிறது.




https://twitter.com/asimusafzai/status/1109448185154555904?s=19
Tweet by Asim Yousafazi, Author & Editor


இதனை அடித்து, ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார் இஸ்லாமிய மௌலானா.




https://twitter.com/nailainayat/status/1109460625820999680?s=19
Tweet by Naila Inayat, Pakistan Journalist


இதனை அடுத்து, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள், இது தொடர்காக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளார். இதனை டிவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/SushmaSwaraj/status/1109653044763877377?s=19
Tweet by Sushma Swaraj, Minsiter of External Affairs

Similar News