நளினியை சோனியாகாந்தி மன்னித்தது போல நீங்களும் மரணதண்டனை குற்றவாளிகளை மன்னியுங்கள்! நிர்பயா தாயாரிடம் பிரபல பெண் வக்கீல் கோரிக்கை!

நளினியை சோனியாகாந்தி மன்னித்தது போல நீங்களும் மரணதண்டனை குற்றவாளிகளை மன்னியுங்கள்! நிர்பயா தாயாரிடம் பிரபல பெண் வக்கீல் கோரிக்கை!

Update: 2020-01-18 05:20 GMT

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நர்சிங் கல்லூரி மாணவி நிர்பயா நான்கு பேர் கொண்ட கும்பலால் மிகவும் கொடூரமாக பாலியல் சித்திரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பேரில் நான்கு பேருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகள் நான்கு பேரின் கருணை மனுக்களை நீதிமன்றமும்,  கடைசியில் குடியரசுத்தலைவரும் நிராகரித்த நிலையில் வரும் 22 ந்தேதி காலை 7 மணியளவில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இருந்தனர். 



இந்த நிலையில் டெல்லி கோர்ட் மீண்டும் இவர்களின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 2- ந்தேதி காலை 6 மணிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதற்கு காரணம் வரும் பிப்ரவரி - 2 ந்தேதி நடைபெறவுள்ள டெல்லி மாநில சட்டசபை தேர்தல்தான் எனவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி நால்வருக்கான தூக்குதண்டனை தனது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என கருதியதால்தான் தேதி மாற்றப்பட்டதாக ஊடகங்கள் குறை கூறின.


இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி குற்றவாளிகளை தண்டிப்பதை விட்டுவிட்டு மேலும் தண்டனை தள்ளிப் போவதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்தார். தனது மகளை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.




https://twitter.com/IJaising/status/1218195956551708673?ref_src=twsrc^tfw


இந்த நிலையில் டெல்லியின் பிரபல வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் டுவிட்டர் மூலம் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார், அதில்: உங்கள் உணர்வை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் மரணதண்டனை என்ற கருத்து ஏற்புடையது  அல்ல, தனது கணவர் ராஜிவ்காந்தி கொலையாளி நளினியை மன்னித்து  தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சோனியா காந்தி சிபாரி செய்தது போல நீங்களும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உதவுங்கள் என கேட்டுள்ளார்.    


SOURCE:- OPINDIA


Similar News