ஒரே நாளில் சிவபதம் பெற்ற நால்வர்

ஒரே நாளில் சிவபதம் பெற்ற நால்வரை பற்றி காண்போம்.

Update: 2023-07-26 17:45 GMT

திருவஞ்சைக்களத்தில் இருந்து சுந்தரரும் சேரமான் பெருமாளும் கைலாயம் சென்று சிவபதம் அடைந்தது ஒரு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று ஆகும். இந்த நாளில் இவர்கள் மட்டுமல்லாது இன்னும் இரண்டு பேரும் சிவபதம் அடைந்தனர். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தவர் மிழலை நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னர் மிழலை குறும்பர். சிவனடியார்களுக்கு உணவு அளித்தும் செல்வங்களை கொடுத்தும் தொண்டு புரிந்து வந்தார்.


தினமும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டதொகை பதிகத்தை விதிப்படி வணங்கியும் பாடியும் சுந்தரரை நினைத்து துதித்து வந்தவர். அஷ்டமா சித்திகளும் கைதரப்பெற்றவர். சுந்தரர் திருக்கையிலை அடைந்ததை தனது இருப்பிடத்திலிருந்து உணர்ந்து கொண்ட மிழலை குறும்பர் சுந்தரர் போன பின்பு நான் அவரை பிரிந்து வாழ மாட்டேன் .யோக நெறியின் மூலம் சிவனடியை அடைவேன் என்று கூறி அதன்படியே சிவபதம் அடைந்தார்.


வெள்ளை யானை மீது சுந்தரரும் குதிரையில் சேரமான் பெருமானும் கயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பூமியில் விநாயகரை பூஜித்து கொண்டிருந்தார். அவ்வையார் அவரிடம் நீயும் எங்களுடன் கயிலை வா என்று அழைத்தார் சுந்தரர். அவ்வையாருக்கும் கயிலை செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் விநாயகருக்கு செய்து கொண்டிருந்த பூஜையை விரைவாக முடிக்க எண்ணினார். அதை உணர்ந்து கொண்ட விநாயக பெருமான் அசரீதியாக அவ்வையே எனக்கு செய்ய வேண்டிய வழிபாட்டை வழக்கம் போல நிதானமாகவே செய். சுந்தரருக்கு முன்பாகவே நான் உன்னை கயிலை கொண்டு போய் சேர்ப்பேன் என்றார்.


அதன் பின்னர் விநாயகரை துதித்து 'சீதக்கலப செந்தாமரப்  பூம்பாத...' என்ற பாடலை பாடினார். 72 அடிகளை கொண்ட இந்த பாடல் விநாயகர் அகவல் என்று அழைக்கப்படுகிறது. அவ்வை வழிபாட்டை முடித்ததும் விநாயகர் தன்னுடைய துதிகையில்  தூக்கிக்கொண்டு போய் கைலாயத்தில் விட்டு விட்டார். அதன் பிறகு சுந்தரரும் சேரமானும் கயிலாயம் வந்து சேர்ந்தன.

Similar News