பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது
ஈரோட்டில் பா.ஜ.க பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் பா.ஜ.க பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பா.ஜ.க இளைஞரணி மாவட்டம் முன்னாள் செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவில் மர்மமானவர்கள் அந்த பர்னிச்சர் கடைக்கு தீ வைக்க முயன்றனர் .அவர்கள் கடையில் ஜன்னல் வழியாக இரண்டு பாக்கெட்டுகளில் டீசலை உள்ளே போட்டு உள்ளனர். பிறகு ஒரு துணியில் தீ வைத்துவிட்டு அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர். இதில் சில பகுதிகளிலும் கடையில் உள்ளே இருந்த மேஜையும் லேசாக தீப்பற்றி அணைந்தது.
இதனால் கடையில் இருந்த மற்ற பொருட்கள் எறியாமல் தப்பியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்டம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஈரோடு டவுன் துணை போலி சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் பர்னிச்சர் கடைக்கு தீ வைக்க முயன்ற சம்பவத்துக்கு பா.ஜ.க வினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்கு தீ வைக்க முயன்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஈரோடு கருங்கல்பாளையம் ஜெகன் வீதியைச் சேர்ந்த முகமது ரபீக்கின் மகன் சதாம் உசேன், ஈரோடு பி.பி. அக்ரஹாரம் கைக்கோளர் வீதியைச் சேர்ந்த முகமது இலியாஸின் மகன் கலீல் ரகுமான் ஈரோடு இந்திரா நகரைச் சேர்ந்த அமானுல்லாவின் மகன் ஜாபர் சாதிக், இவரது தம்பி ஆசிக் அலி ஆகியோர் கடைக்கு தீ வைக்க முய=ன்றதும் அதில் சதாம் உசேன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகி என்பது மற்றும் மூன்று பேரும் அவருடைய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் என்று கைது செய்தார்கள்.