ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கொல்கத்தாவுக்கு இலவச பஸ் சேவை - ஒடிசா முதல் மந்திரியின் தாராள அதிரடி நடவடிக்கை!

ரயில் விபத்தை தொடர்ந்து கொல்கத்தாவுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-05 07:30 GMT

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து பாலசூர் தடத்தில் வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக கொல்கத்தா செல்ல வேண்டிய பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது . இதற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் நிவாரண நடவடிக்கை எடுத்துள்ளார் . அவர் பூரி, புவனேஸ்வரம் கட்டாக் நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


இது பற்றி மேலும் அவர் கூறும் போது பூரி, புவனேஸ்வரம் கட்டாக் நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு இயக்கப்படுகிற இலவச பஸ்களுக்கான மொத்த செலவும் முதல் மந்திரி நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். பாலசோர் தடத்தில் இயல்பான ரயில் சேவை தொடங்கும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார். மேற்கண்ட 3 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு தினமும் 50 பஸ்கள் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News