பெண்களுக்கு 'சரக்கு' இலவசம் - திருப்பூர் தனியார் விடுதியை சுற்றிவளைத்த போலீஸ்
டி.ஜே பார்ட்டியில் மகளிர்க்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என தனியார் விடுதி அறிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டி.ஜே பார்ட்டியில் மகளிர்க்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என தனியார் விடுதி அறிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூரில் டி.ஜே பார்ட்டியில் மகளிர்க்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட தனியார் விடுதி மீது திருப்பூர் மாநகராட்சி மேயர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று இரவு நடைபெறவிருந்த டி.ஜே பார்ட்டியில் தம்பதியாக வருபவர்களுக்கும், மகளிருக்கும் அனுமதி இலவசம் எனவும் மகளிர்க்கு மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் விடுதி நிர்வாகம் சார்பில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் நாட்களில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறாமல் இருக்க தனியார் விடுதியை கண்காணிக்குமாறு காவல் ஆணையரிடம் திருப்பூர் மாநகராட்சி மேயர் புகார் மூலம் வலியுறுத்தியுள்ளார்.