திருமலா-திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் இலவச திருமணம் - மீண்டும் துவக்கம்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திரா முழுவதும் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி இலவச திருமணங்கள் நடத்தப்படவிருக்கின்றன.

Update: 2022-06-06 13:15 GMT

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திரா முழுவதும் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி இலவச திருமணங்கள் நடத்தப்படவிருக்கின்றன.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து என்ற பெயரில் இலவச திருமணங்கள் திருமலையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலும் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

இந்த திருமணத்திற்காக பதிவு செய்துகொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தங்க தாலி, திருமண வஸ்திரங்கள், மங்கலப் பொருட்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்யாண மஸ்து திட்டத்தை நடப்பாண்டு மூலம் மீண்டும் தேவஸ்தனம் துவங்கியுள்ளது.

இதற்காக சுபமுகூர்த்தங்கள் முடிவு செய்யப்பட்டு அந்த லக்ன பத்திரிகைகளே தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜைகள் செய்தனர். அதன்படி வரும் ஜூன் 7ம் தேதி ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திருமலா- திருப்பதி சார்பில் இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளன.

Similar News